Smart Card -குடும்ப அட்டை சேவை

Smart Card -குடும்ப அட்டை சேவை

  • Latest Version
  • Creative App Services
Advertisement

Tamilnadu Smart Ration Card Any Online Member Add, Remove, Check Status..

About this app

தமிழ்நாடு அரசின் ஸ்மார்ட் கார்டு தகவல் மற்றும் அதன் சேவைகளும்..

• ஸ்மார் கார்டில் உங்காள் குடும்ப ஊறுப்பினர் சேர்க்க..
• குடும்ப உறுப்பினர் நீக்கவும்..
• குடும்ப தலைவரின் பெயர் சேர்க்க/நீக்க..
• கிடங்கு பொருள்கள் விவரம்..
• மொத்த ஸ்மார்ட் கார்டின் விவரங்கள் தெரிந்து கொள்ளவும்..
• பொது விநியோக திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும்...

பொது விநியோக திட்டம் அமைப்பு:
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

1. பொது விநியோக திட்டத்தின் நோக்கங்கள்:
* தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்க.
* அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க.
* முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள், எப்பொருளும் இல்லாதவை (NPHH-NC) வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் எப்பொருளும் பெற இயலாது. முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் எப்பொருளும் இல்லாதவை குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 31.07.2019 வரை 47,282 ஆக உள்ளது.
* உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க
* பயனாளிகள், நியாய விலைக் கடைகளை ஒஎளிதாக அணுக
ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க
* ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்க

2. பொது விநியோக திட்டத்தின் செயல்திறன்களை அமலாக்கம் செய்யும் முக்கிய உத்திகள்:
* அட்டைதாரர்கள் கொடுக்கும் புகார்களை திறம்பட கையாளும் முறைகள் செயல்படுகின்றது
* ஏற்கனவே இருக்கும் நியாய விலைக் கடைகளுக்கு செல்ல சிரமம் உள்ள கிராமங்களுக்கு பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டுள்ளது
* தற்காலிகமான மற்றும் பாதை வரைபடங்கள் மூலம் அத்தியாவசியமான பொருட்களை சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்புடன் ஒரு இடத்தில் இருந்து கடைகளுக்கு பரிமாற்றம் செய்யும் முறைகள்
* மேம்படுத்தப்பட்ட முறைகள், வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முறைகேடுகளை தடுக்கும் முறைகள்
* மின்னாளுகை மூலம் நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை பிழை இல்லாத மற்றும் சரியான அளவுகளை ஒதுக்கீடு மற்றும் பரிமாற்றம் செய்யும் முறைகள்.

3. பொது விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள்:
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்திற்குறிய கொள்கைகளை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வகுத்திருக்கிறது. இந்த கொள்கைகள், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தலைமையின் கீழ் மற்றும் அரசு செயலாளர் தலைமையின் கீழ் உள்ளது. பின்வரும் துறைகள், தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டத்தின் முக்கிய பங்குதாரர்கள்:

© உணவு வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (CS&CPD): ஆணையரை தலைவராகக் கொண்டு 33 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 315 தாலுக- மண்டல அலுவலங்களுடன் செயல்படுகிறது.
© தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC): பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள அத்தியாவசியமான பொருட்களை கொள்முதல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது. இக்கழகம் நிர்வாக இயக்குனர் தலைமையின் கீழ் செயல்படுகிறது.
© கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம் (RCS): எல்லா மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலைக் கடைகளை நடதத பொறுப்பை பெற்றுள்ளது. இச்சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுப் பதிவாளரின் துணையுடன் உள்ள பதிவாளரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது.
© உணவு வழங்கல் முறையின் குற்றப் புலனாய்வுப் துறை: கடத்தல், பதுக்கல், கள்ளச் சந்தை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ளது.
© உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோக அமைச்சரகம்: இந்திய அரசாங்கத்திற்கு கீழ், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை நிர்ணம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள மாநில அரசாங்கத்திற்கு மானிய உணவுப் பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது.
© இந்திய உணவு கழகம்: இது ஒரு இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்த அமைப்பு அரிசி, கோதுமை மற்றும் மற்ற அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள உணவு ஒதுக்கீடு அமைச்சரகத்தின் ஆணைகள் படி மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்கிறது.

Versions Smart Card -குடும்ப அட்டை சேவை

App: Similar Smart Card -குடும்ப அட்டை சேவை